பலரும் சொல்லியுள்ளதுதான்.
நானும், அம்புலிமாமா, சிறுவர்மலர், கோகுலம்-இல் ஆரம்பித்து நூலகம் சென்று சிறுவர் நாவல், தெனாலிராமன் பீர்பால் கதைகள் என படித்து பின்னர் ராஜேஷ்குமார், சுபா என நகர்ந்து பதின்மவயதில் பாலகுமாரனைப் படிக்கத்தொடங்கினேன். பின்னர் ஆனந்தவிகடனின் மூலமாகவே ஜெ.மொ., மற்றும் எஸ்.ரா.வின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் நீங்கள் குறிப்பிட்டதனால் சுந்தரராமசாமி, எஸ்.ரா.வினால் பிரமிள் என வாசிப்பு தொடங்கியது. அதன் பின்னரே இணையத்தின் மூலமாக கிடைத்த பல அறிமுகங்களால் புத்தகக் கண்காட்சிக்கு சென்று இலக்கிய வாசிப்பை மேலெடுக்க முடிந்தது. சக பதிவர்கள் அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்களும் சேர்ந்துகொண்டனர். பக்குவப்பட பக்குவப்பட மேலே உள்ள தளத்திற்கு நகரும் பயணம் இது. இதில் ராஜேஷ்குமாருடனே நின்றுவிடுபவர் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.. 10 ஆம் வகுப்புடனே படிப்பை பாதியில் விட்டவர்களைப்போல...
குடும்ப நாவல்களை எழுதும் பெண் எழுத்தாளர்கள்... அவர்களுடயவை தொலைக்காட்சி நெடுந்தொடர்களைப்போல... அடுத்தவீட்டிற்கு நிகழும் நிகழ்ச்சிகளை காட்டி ’காசிப்’ பேசும் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு வேறு ஒன்றும் இல்லை...
சுஜாதாவினுடையது வணிக எழுத்துதான் என்றாலும் அது அடுத்த நிலை. கொஞ்சமேனும் அறிவுப்பூர்வமான விசயங்களை வேறு உலகங்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தது...
பாலகுமாரன் இன்னும் அடுத்த நிலை என்றே சொல்வேன். அதற்கு காரணம் வாழ்வியல் செய்திகளைக் கொண்டிருந்தது அவரது நாவல்கள். அவற்றில் எப்போது கதாபாத்திரத்தின் வசனங்களோடு அதை எதனால், எதற்காக எப்படி பேசியது அந்தப் பாத்திரம் என்ற உளவியல் அணுகுமுறை இருந்தது. இதனால் பயன்பெற்று அக்கருத்துகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்தவர்கள் பலர் என்பதனால் அது ‘நுகர்வு’ எழுத்து அல்ல என்பது என் கருத்து. பின்னர் அவர் முழுவதும் ஆன்மீகமாக எழுத ஆரம்பித்தபோது அவர் தன் எழுதும் திறமையை ‘பயன்படுத்த’ தொடங்கிவிட்டார்.
/* சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். */
நல்ல உதாரணம். இம்மலிவு ரசனைகளால் மேலேறி வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்பது உண்மை.
இளைஞர்கள் பலர் தமிழ் வாசிப்பதே இல்லை. ஆங்கிலத்திலும் பெரும்பாலும் மெல்சன் பூன், சிட்னி செல்டன் இதையே வாசிக்கின்றனர். கல்லூரிப் பருவத்தில் சிட்னி செல்டனின் நாவல் ஒன்றை முதல்முறை வாசிக்கத் தொடங்கினேன். 10 பக்கங்களிலேயே அவர் வழக்கமான வணிக எழுத்தாளர் எனப்புரிந்து வெளியே வந்துவிட்டேன்.
ஒரு பயணத்தின் போது கல்கியின் விசிறியான நண்பருடன் நீண்ட விவாதம் செய்ய நேரிட்டது. ‘என்ன உங்க சிவகாமி அம்மா சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா’ என்று அதீத கற்பனை வாசிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் கிண்டலடிக்கும் வசனம் ஜெ.ஜெ. சில குறிப்புகளில் உண்டு. அதிலிருந்து துவங்கியது விவாதம். அது வாசிப்பின் ஒரு நிலை என்றும் அதிலிருந்து மேலே இலக்கிய வாசிப்புக்கு வரவேண்டும் என்றும் நான் சொன்னேன். அவனோ அது தாழ்வானது என்றும் மேலேறி இலக்கியத்துக்கு வரவேண்டும் என்று சொல்வதை ஏற்கமுடியாது என்றும் வாதிட்டான். அது வேறு genre என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம் என்றான்... எனினும் ஒரு நாள் நான் சொன்னதை உணர்வான் என்றே நம்புகிறேன்... இணையத்தில் ஜெ.மோ.வின் பதிவுகள் பலவும் காடு நாவலும் அவனுக்கும் பிடித்திருக்கின்றன... அந்த வகையில் அவனை வாசிப்பில் வைத்திருப்பதற்கு வணிக எழுத்துகள் பயன்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது...
http://www.jeyamohan.in/?p=7817 பதிவில் இட்ட பின்னூட்டம்!
Friday, August 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
பாலகுமாரன்... அதற்கு காரணம் வாழ்வியல் செய்திகளைக் கொண்டிருந்தது அவரது நாவல்கள். அவற்றில் எப்போது கதாபாத்திரத்தின் வசனங்களோடு அதை எதனால், எதற்காக எப்படி பேசியது அந்தப் பாத்திரம் என்ற உளவியல் அணுகுமுறை இருந்தது. இதனால் பயன்பெற்று அக்கருத்துகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்தவர்கள் பலர் என்பதனால் அது ‘நுகர்வு’ எழுத்து அல்ல என்பது என் கருத்து.//
மிகச் சரியான கருத்து. தெளிவான வாசிப்பு அனுபவம் கொண்டிருக்கிறீர் கள். எனது பதிவில் 'எழுத்தாளர்கள் பகுதி'யில் பாலகுமாரன் அவர்களைப் பற்றி எழுதும் பொழுது விவரமாக இன்னும் சில அவரது புதினங்களை மேற்கோளிட்டு எழுதுகிறேன்.
I feel any book should transform a person from current level to higher level.
Yes sai, I too started with siruvar malar and progressed with Malaimathi->ramani chandran->Rajeshkumar->suba->balakumaran->vedhtri maharishi->vallalar->vivekananda
I'm not okey with your comment abt balakumaran.
After reading balakumaran's books i understood following
1. Respect woman.
2. What is Love and not a love?
3. How a woman can change a family?
4. Not to see woman as sex toy.
5. He spoke in detail levels of
relationship between 2 human.
6. Boldness to accept.
7. How to improve self.
8. Mind and beyond mind.
பாலு, என் கருத்தில் நீங்கள் எங்கு வேறுபடுகிறீர்கள் என்று சொல்லவில்லையே?
நானும் பாலகுமாரன் நாவலால் மக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள் என்றுதானே சொல்லியுள்ளேன்?
Dear Chanakya,
Would like to suggest few more names to you..(if not read before..)
1. Adhavan 2. Ashokamitran 3. M.Venkatram 4. Ma.Ve.Sivakumar 5. Vannadasan 6. Vannanilavan 7. Indira parthasarathy 8. Puthumaipithan 9. Ku.Pa.Ra 10. La.Sa.Ra
the above serial as from my memory.. no other significance..
There is a lot of treasure in Tamil Modern Literary World.. Some way we have to archive those things..
Rgds.
சிவன்,
ஆம் இவர்களைப் படிக்க வேண்டும். வண்ணதாசனை மட்டும் படித்திருக்கிறேன்(அகம்-புறம்).
குறிப்பாக புதுமைப்பித்தனை வாசிப்பதே எனது அடுத்த நோக்காக இருக்கும்.
1. Adhavan 3. M.Venkatram 4. Ma.Ve.Sivakumar
இவை எனக்கு புதிய பெயர்கள். பகிர்தலுக்கு நன்றி!
இவர்களின் சில ஆக்கங்கள் இங்கே (http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_3000.html) சேமித்து பதிக்கப்படுவதை சமீபத்தில் அறிந்தேன்
Post a Comment