மினிமேக்ஸ் பதிப்பில் விநாயக் நாதுராம் கோட்ஸே பற்றிய கையடைக்க அறிமுக நூல் படித்தேன்.
கோட்ஸே பிறந்ததுமுதல் தூக்கிலிடப்பட்டது வரையிலான அவரது வாழ்க்கை சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. எளிய குடும்பத்தில், கிராமத்தில், பிராமணக்குடும்பத்தில் பிறந்து படிப்பும் சரியாக வராமல், தந்தைக்குப் பிறகு குடும்பச்சுமையையும் சரியாக ஏற்க முடியாமல் அல்ல பட்ட கோட்ஸே கொள்கைப்பற்றில் வீரியத்தோடு இருந்து செயலாற்றியது வியப்பே. வீர் சாவர்க்கரிடம் பால பாடம் கற்றிருந்தாலும் கோட்ஸேயின் செயல்களுக்கும் சாவர்க்கருக்கும் பெரிய தொடர்பேதும் இல்லை என்பதை அறிய முடிகிறது.
இந்துத்துவக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு இந்து சாம்ராஜ்ஜியம் அமையவேண்டும் அதுவும் அகண்ட பாரதம் வேண்டும் என்று கனவு கண்டவன் அதற்கு முக்கிய தடையாக இருப்படையாக
காந்தி இருப்பதோடு இந்துக்களுக்கு துரோகம் இழைக்கிறார் எனவும் கருதியதால் அவரைக்கொல்ல முடிவெடுக்கிறான். கடைசிவரை துணையாக நிற்கும் ஆப்தாவை சந்தித்தது கோட்ஸேவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு எனலாம்.
இதில் தெரிந்துகொண்ட ஒரு முக்கிய செய்தி என்னவெனில் கோட்ஸேவும் வேறு சில அமைப்பினரும் முன்னரே பலமுறை காந்தியை கொல்ல முயன்றனர் என்பதே. எனினும் தனது பிரார்த்தனைகளி கலந்துகொள்ள வருபவர்களிடம் எந்த சோதனையும் செய்யக்கூடாது என காந்தி பலமுறை கராறாக மறுத்துவிட்டார். இதனால் ஆட்சியாளர்களுக்கும் காவலர்களுக்கும்
காந்திக்கு பாதுகாப்பு கொடுத்தல் என்பது பெரிய சிக்கலாக இருந்துள்ளது.
கோட்ஸேவுக்கு காந்தியின்மேல் ஏன் கோபம் ஏற்பட்டது என்பதை ஆங்காங்கே வரலாற்று சம்பவங்களினால் குறிப்பிட்டுள்ள ஆசிரியர், ‘காந்தி சிறுபான்மையினர் எல்லா உரிமைகளோடும் வாழவேண்டும்’ என்ற நோக்கினில்தான் செயல்பட்டாரே தவிர அதற்கு இந்துக்கள் மேல் அக்கறையில்லை என்று அர்த்தம் கிடையாது என அவரது கருத்தையும்
சேர்த்திருக்கிறார். உதாரணத்திற்கு, சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட கலவரங்கள், பிரிவினையினால் இடம்பெயர்ந்தல் நடந்துகொண்டிருந்தபோது காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார்.
உண்ணாவிரதத்தை கைவிட சில கோரிக்கைகளை வற்புறுத்துகிறார். அவை எல்லாமே இஸ்லாமியருக்கு செய்யப்படவேண்டியவை குறித்தே உள்ளன. கலவரத்தில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்களை அரசாங்கம் கட்டித்தரவேண்டும் என வற்புறுத்திய காந்தி இடிக்கப்பட்ட கோயில்கள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இந்துக்களுக்கு மட்டும் புணரமைக்க பணம் எங்கிருந்து வரும்? ஆசிரியர் சொல்வது போலவே காந்திக்கு இந்துக்கள் மேலும் அக்கறை இருந்தால் ஏன் அதை வெளிப்படுத்தவில்லை? அதுவும் சுமார் 20 ஆண்டுகளாக அதிருப்தியும் காந்தியின் மதம் சார்ந்த செயல்பாடுகளுக்கு எதிர்ப்பும் விமர்சனங்களும் இருந்து வந்திருக்கிற சூழ் நிலையில் தன் நடுநிலைத்தன்மையை காந்தி தன் செயல்களில் தெளிவாக
வெளிப்படுத்தியிருக்கலாமே?
வரலாற்றில் முக்கிய ஆவணமாக கருதப்படும் கோட்ஸேயின் நீதிமன்ற வாக்குமூலத்தைப் பற்றி ஆசிரியர் எதுவும் குறிப்பிடாதது வியப்பே. அறிமுகப் புத்தகத்தில் அதற்கு இடமில்லை என நினைத்துவிட்டார் போலும!
தன்க்கு பாதுகாப்பு கூடாதென பிடிவாதமாக இருந்ததனால் எப்படி காந்திப் படுகொலை என்ற வரலாற்று சோகம் நிகழ்ந்ததோ அதைப்போலவே அவரது பல பிடிவாதங்கள் இந்திய மக்களுக்கு பாதகமாகவே அமைந்ததாக நான் கருதுகிறேன். காந்தி மீண்டும் மீண்டும் ஒரு உத்தம சமுதாயத்தை உருவாக்க முனைந்திருக்கிறார் என்பது புரிகிறது. அறிவியலில் எப்படி ideal machine (100 சதவிகித உற்பத்தி,வெளிப்பாடு தருகிற ஆற்றல் இழப்பில்லாத கருவி)-ஐ உருவாக்க முடியாதோ அதுபோலவே ஒரு உத்தம உலகத்தை படைக்க
முடியாது. அவரின் தனிப்பட்ட விசயங்களில் அக்கொள்கைகளை எப்படியும் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் நாட்டுமக்களின் பிரச்சனைகளில் ஒரு தலைவர் யதார்தத்தை உணர்ந்தும் செயல்பட்டிருக்க வேண்டும்.
தன்னைத் தலைவனாக ஏற்றவர்கள் செய்கின்ற ஆட்சிக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் அது தன் கருத்துகளை விடாப்பிடியாக திணிக்கும் emotional blackmail அல்லவா? இன்று வரை அரசியல்வாதிகளிடம் தொடர்கிற நோயான ‘சிறுபான்மையினரை குஷிப்படுத்துதல்’ (minority appeasing)-இன் விதை காந்தியும் காங்கிரஸும் அவர்கள் பாரம்பரியமாக அதைக் கடைபிடித்தலுமே எனக் கருதலாம்.
https://www.nhm.in/shop/978-81-8493-172-3.html
Friday, September 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment