
அழகான பொய்கள்
தினமும் தொலைபேசு,
பிறந்த நாள், விநாயகர் சதுர்த்தி என
எல்லா விசேஷங்களுக்கும் பரிசளி!
துவங்கும் எல்லாச் செயல்களுக்கும்
வாழ்த்துச் சொல்!
வார்த்தைகளால் எனைக் கரை,
செய்கைகளால் எனை நெகிழ்த்து!
கனவுதோறும் வா,
அன்பால் எனை அடித்துச் செல்!
‘காதல்’ தானெனத் தீர்மானிக்கும்
தோழமையிடம் கூசாது சொல்
நட்புத்தானென!
என்றும் அழகாய்த்தானிருக்கின்றன
பொய்கள்...
-- செ.ரமேஷ்குமார்
உணர்வு
தொலைபேசியில் பேசிச் சிரிக்கும்போதும்
திரையரங்க இருளில் உரசி மகிழும்போதும்
கடித வர்ணனை காகிதப்புணர்வாய் மாறும்போதும்
உனது அண்ணனுக்கோ
அவனின் அப்பனுக்கோ
தெரியாமலிருக்கச் செய்யும்
ஒளிவுமறைவு யுக்திகளின் போதும்
நிழலாய் குடையாய்
உடன் வரும்
எனக்கும் வயது பத்தொன்பது...
என்றேனும் ஒரு நாள்
உணர்ந்ததுண்டா தோழி..?
-- இரா.காமராசு
ஆனந்தவிகடன் 1.7.2001 இதழிலிருந்து! கல்லூரிக் காலத்தில் சேகரித்ததையும் எழுதியதையும் வலையேற்றிவிடுவது என்ற முடிவில் இருக்கிறேன்... அது எத்தகைய தரத்தில் இருந்தாலும்! :)


1 comments:
அருமை அன்பரே
Post a Comment