Friday, March 25, 2011

கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம்-பூவரசன் படப்பாடல்-1996

90-களின் இளையராஜா பாடல்கள்தான் என் பள்ளிப்பருவத்தை நிறைத்திருந்தன. இசை எனது முதலாவது விருப்பமாக இருந்தபோதும் இதுவரை திரையிசை குறித்து அதிகம் எழுதியதில்லை! இனி எழுத முயற்சிப்பேன், நான் ரசித்த இசை குறித்து!

அது ஒரு பொற்காலம். இளையராஜா உச்சத்தின் உச்சியில் இருந்த காலம்.  திரையரங்கிலோ தொலைக்காட்சியிலோ அல்லாமல், நான் தனியாக பாடல்கள் கேட்டது என்பது ‘சின்னத்தம்பி’ சமயத்தில் இருந்து என்று நினைவு. குடியிருந்த லைன் - வீடுகளில் ஒன்றில் டேப்-ரிகார்டர் இருந்தது. திருப்பித் திருப்பி சின்னத்தம்பி பாடலைப் போட்டு விடுமுறை முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தோம்.அதற்கு முன்னர் என்றால் எப்போதாவது வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்லும்போது டேப்பில் கேட்பதுதான். அப்படிக்கேட்டவையில் ஞாபகத்தில் இருப்பது ‘கேளடி கண்மனி’ மற்றும் ‘புதுப்புது அர்த்தங்கள்’.  எங்கள் வீட்டுக்கு டேப் வந்தது நான் 11-ஆம் வகுப்பு படிக்கும்போதுதான். அப்போது பட்ஜெட் படங்களை தேவாவும் பெரிய படங்களை ரகுமானும் ஆக்கிரமித்திருந்தனர். அப்போதுதான் பழைய இளையராஜாப் பாடல்களைத் தேடிக் கேட்கத் தொடங்கினேன்!

சின்னக்கவுண்டர், எஜமான், வீரா, தளபதி, குணா, பொண்ணுமணி, மறுமலர்ச்சி, ராஜ்கிரன் படங்கள் என எத்தனையோ சிறந்த பாடல்கள் அப்போது ராஜாவிடமிருந்து வந்துகொண்டிருந்தன.  எனினும் நம் தமிழ் சூழலில் ஒரு பரிதாபம் என்னவென்றால் படம் வெற்றிபெறவில்லையெனில் அதன் பாடல்களும் கண்டுகொள்ளப்படாது; ஒரு சில விதிவிலக்குகள் உண்டு.

அப்படி கண்டுகொள்ளபடாமல் விடுபட்ட முத்துகளில் ஒன்றுதான் ‘பூவசரன்’. எஸ்.பி.பி.யும் சித்ராவும் மயக்கும் மூன்று முத்தான மெலடிகள் இப்படத்தில்!. இந்தக் காலகட்டதில் வந்த இ.ரா. பாடல்கள் தொழில் நுட்பத்தின் சிறந்த பங்களைப்பையும் கொண்டிருப்பது காதுகளுக்கு கூடுதல் இனிமை. அதே நேரம் இரைச்சல் என்பதை நாம் எங்குமே கேட்க முடியாது. ஒரு துளி வாத்தியத்தைக் கூட தேவையின்றி சேர்க்கமாட்டார் ராஜா!

பூவரன் படத்தில் ’இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்’ என்ற பாடல் ஓரளவுக்கு வெளியில் தெரிந்திருக்கிறது. ‘ராசாத்தி ராசாத்தி உன்னை எண்ணி மனமுருகி நின்றேன் நின்றேன்’-உம் ‘கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்’-உம் அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னிசைப் பாடல்கள்தாம்.

எனக்கும் நீங்கள் இங்கேயும் பாடலைக் கேட்குமாறு ஒரு பிளேயரை பொதிந்து கொடுக்க ஆசைதான்! ஆனால் இன்னும் அந்தச்சோதனைகளை  முயற்சி செய்து பார்க்கவில்லை. யூ-டியூப்பிலும் பாடல் இல்லை. cooltoad.com-இல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்! ;). இப்போதைக்கு பாடல்வரிகள் மட்டும்....

                          பாடல் : கட்டிகிடலாம் கட்டிக்கிடலாம்
                          பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
                          இசை : இளையராஜா
                          படம் : பூவரசன்
                          வருடம் : 1996


பெ: கட்டிக்கிடலாம்  கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்
        வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்து இதழ் ஒத்தடம்
ஆ: பொடவை மயக்கம்  வருதே வருதே
        உடம்பு முழுக்க சுடுதே சுடுதே
       கிடந்து தவிக்கும் உயிரே  உயிரே
       கடஞ்சு எடுத்த  தயிரே தயிரே

பெ: கட்டிக்கிடலாம்(2)

ஆ: ஊதக்காத்து ராப்போது தீப்போல ஆயாச்சு
       ஊரப்பாத்து ராத்தூக்கம் நேத்தோடு  போயாச்சு

பெ: கூடு போட்டு வெச்சாலும்  உன்னாசை நிக்காது
       கோலம் போடக்கூடாதே நீ கொஞ்சம் ஒக்காரு

ஆ:சின்னச் சின்னக் கோலம் போட்டுப் பாக்கலாமா
      புள்ளி வைக்க வேணும் தள்ளி நிக்கலாமா

பெ: சுத்தமான மனசு கெட்டுப் போகலாமா
        குத்தம் சொல்லி யாரும் வம்பு பேசலாமா
ஆ:பொல்லாத சில்வண்டு பஞ்சாங்கம் பாத்தா
       பூந்தேனை வாங்கும்

ஆ: கட்டிக்கிடலாம்(2)
பெ: உனக்கு பொடவை மயக்கம் (4)
ஆ: கட்டிக்கிடலாம்(2)

ஆ: வெண்ணிலாவில் சோறாக்கி  நாம் திங்கக்கூடாதா
       தென்றல் வந்து நம்மோடு தெம்மாங்கு பாடாதா
பெ: வெண்ணிலாவும் என்னான்னு கீழாக்கப் பாக்காதா
        ஜோடி ஒன்னு அங்கேன்னு ஊரார்க்கு சொல்லாதா
ஆ: உன்ன என்னப்போல நூறு பேத்தப் பார்த்து
       பழகினப் போனதம்மா பால் நிலாவும் நேத்து
பெ: சொல்லிச் சொல்லி என்னை சொக்கவைக்கும் மாமா
        இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்கலாமா
ஆ: நாள் பார்த்து நாள் பார்த்து  நாள் போகக்கூடும்
       நடிக்காதே மானே

பெ:கட்டிக்கிடலாம்(2)
ஆ: எனக்கு புடவை  மயக்கம்(4)
ஆ: கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம்
பெ: கட்டினதுக்கப்புறம்
ஆ: வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம்
பெ: ஹும்ஹும்ஹும்...

-------------------------------

இரண்டாவது பல்லவியை எழுதும்போது 50 ரன் அடித்த கிரிக்கெட் வீரரைப்போல் ஒரு பார்முக்கு வந்துவிட்டார் போல, கவிஞர்!. முதல் 4 வரிகளில் நல்ல கற்பனை, அடுத்த 4 வரிகளில் நல்ல வார்த்தைப் பிரயோகம்! கவிஞர் யாரென்று கண்டுபிடித்துச் சேர்க்கவேண்டும். அடுத்த பதிவில் மற்றுமிரு பாடல்களின் வரிகளோடு வருவேன்! :-)

0 comments: