யாரோ தவறவிட்டதெனச் சொல்லி
ஒரு பேனாவைத் தருகிறாய்!
ஏன் என்று புரியாமல்
வாங்கிக் கொள்கிறேன்!
சில வருடங்கள் கழிந்து...
எடுத்துப் பார்க்கையில்
புரிகிறது...
நேரடியாக அன்பளிக்க முடியாத
உன் தயக்கமும்
நினைவுப் பரிசெனக் கொண்டாடத்
தெரியாத என் அறியாமையும் :)
Thursday, March 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
என்ன அழகான சிந்தனை...வாழ்த்துகள்
அது என்ன "பதின்ம" அறியாமை ??
kayos ’பதின்ம’ என்ற சொல் teen என்பதற்கு பயன்படுத்தப் படுகிறது. teen-age=பதின்ம வயது...
Post a Comment